ஒரு நாள் ஒரு நபர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அச்சமயம் ஒரு புதரில் ஓர் பூனை மாட்டிக்கொண்டு விடுபட வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.
புதரில் மாட்டிக்கொண்டு விடுபட முடியாததால் பூனை மிரண்டு போயிருந்தது.
அதன் நிலையைக் கண்ட அந்த நபர் அதற்கு உதவ முற்பட்டார்.
புதரில் மாட்டியிருந்த பூனையை வெளியே கொண்டு வர முயற்சிக்கையில் பூனை தனது கரங்களால் அந்த நபரைக் கீறி, காயத்தை ஏற்படுத்தியது.
அந்த நபர் ஒவ்வொரு முறையும் அதைத் தொட்டு விடுவிக்க முயற்சிக்கையில், அப்பூனை இவ்வாறு கீறுவதைத் தொடர்ந்தது.
சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு நபர் அதைப் பார்த்துவிட்டு, பூனைக்கு உதவ முயலும் நபரிடம், “அப்பூனையை அப்படியே விட்டு விடுங்கள்; வீணாக நீங்கள் காயம் அடைவது ஏன்? அதுவே வெளியே வந்து விடும்” என்று அறிவுறுத்தினார்.
ஆனால் பூனைக்கு உதவிக்கொண்டிருந்த நபர், மற்றொரு நபர் கூறிய அறிவுரையைக் காதிலேயே வாங்கி கொள்ளாமல், பூனையை விடுவிக்க முனைந்தார்.
பின்னர் அந்த நபரிடம், “பூனை ஒரு மிருகம்.அதனால் அது அதன் தன்மையை வெளிப்படுத்தியது. நான் ஒரு மனிதன. ஆக நான் எனது மனிதத்தன்மையை வெளிப்படுத்தினேன்” என்று கூறினார்.