ஒரு நாள் தாய் நண்டும், குழந்தை நண்டும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தன.
பின் சிறிது நேரம் கழித்து எழுந்து நடக்கையில், தாய் நண்டு குழந்தை நண்டிடம் பக்கவாட்டாக நடக்காமல், நேராக நடந்து செல் என்று கூறியது.
அதைக்கேட்ட குழந்தை நண்டு தன் தாயிடம், “அன்னையே! நான் எவ்வளவு முயன்றும் என்னால் நேராக நடக்க முடியவில்லை, நீங்கள் கொஞ்சம் கற்றுக்கொடுக்கிறீர்களா?” என்று கேட்டது.
தாய் நண்டும் நேராக நடக்க முயன்றது. ஆனால், அதனாலும் அப்படி நடக்க முடியவில்லை.
பின் தன் குழந்தையிடம் மன்னிப்பு கேட்டது அந்தத் தாய் நண்டு.
இதிலிருந்து என்ன தெரிகிறது...?
உங்களால் செய்ய முடியாத ஒன்றை, பிறரைச் செய்யுமாறு எப்போதும் வற்புறுத்தாதீர்கள்.