ஒரு இளம்பெண் தன் காதலனிடம், “நான் அழகாக இருக்கிறேனா?” என்று கேட்டாள்.
அதைக் கேட்ட இளைஞன் “இல்லை” என்றான்.
அந்த இளம்பெண் வருத்தமடைந்தாள்.
அவள் வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நான் உன்னை விட்டுவிட்டுப் போய் விட்டால், நீ அழுவாயா?” என்று கேட்டாள்.
அதற்கும் அந்த இளைஞர் “இல்லை” என்றான்.
அந்தப் பெண்ணுக்கு அழுகையே வந்துவிட்டது.
உடனே அந்த இளைஞன் சொன்னான்:
"என் ஆசைப் பெண்ணே நீ அழகாக இல்லை. மிக அழகாக இருக்கின்றாய். நீ என்னை விட்டுவிட்டுப் போய்விட்டால், நான் அழ மாட்டேன். என்னைச் சுற்றியிருப்பவர்கள்தான் அழுது கொண்டிருப்பார்கள்"
அதனைக் கேட்ட அந்தப்பெண் மகிழ்ந்து அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள்.