யாங்ஃபு என்ற இளைஞன், தன் பெற்றோரை நீங்கி, குருவைத் தேடிப் புறப்பட்டான்.
வழியில் ஒரு ஜென் குருவைச் சந்தித்தான். ஆன்மீகத்தில் சிறக்க விரும்புவதாக அவரிடம் தெரிவித்தான்.
“வேறு யாரோ ஒரு குருவைத் தேடிப் போவதைவிட புத்தரையே நீ சந்திக்கலாமே?” என்றார் அவர்.
“புத்தரா... அவரை எங்கேக் காண முடியும்?” என்று யாங்ஃபு பரபரத்தான்.
“நீ வீட்டுக்குத் திரும்பும்போது, தோளில் போர்வை போர்த்தி, காலணிகளை மாற்றிப் போட்டுக்கொண்டு ஒரு நபர் உன்னை எதிர்கொள்வார். அவரே புத்தர்” என்றார் குரு.
யாங்ஃபு அவசரமாக வீடு திரும்பினான்.
தன் மகனை வரவேற்கும் பரபரப்பில், அவன் தாய் காலணிகளை மாற்றிப் போட்டுக்கொண்டபடி, தோளில் போர்த்திய போர்வையுடன் கதவைத் திறந்தார்.
அவரைப் பார்த்த கணத்தில் யாங்ஃபு ஞானம் பெற்றான்.