முதல்யுகமான கிருதயுகத்தில் மக்கள் ஒரு பாவம் கூட செய்யவில்லை. எனவே, அப்போது தண்டனைச் சட்டங்களே இல்லை.
அடுத்த யுகம் ஆரம்பித்ததும், லேசாக குற்றச் செயல்கள் துவங்கின. குற்றம் புரிந்தவர்கள் பயப்படுவதற்காக தண்டனைச் சட்டங்கள் தோன்றின. இந்த சட்டங்களை பிரம்மா இயற்றினார். இதை தண்டநூல் என்றனர். இதில் லட்சம் ஷரத்துக்கள் இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் வந்தவர்கள் இதைச் சுருக்கினர்.
கடைசியாக, அசுரகுரு சுக்ராச்சாரியார் இந்த ஷரத்துக்களை ஆயிரமாகக் குறைத்து விட்டார். இந்த ஷரத்துக்களின்படி உலகை ஆள, தேவர்கள் தகுந்த நபரைத் தேடி விஷ்ணுவின் உதவியை நாடினர்.
அவர் தனது மனதில் இருந்து விரஜன் என்பவனை படைத்துத் தந்தார். அவனது வம்சாவழியில் வந்தவன் பிருது. அவனது காலத்தில், இந்த சட்ட திட்டங்கள் மிகக்கடுமையாக கடைபிடிக்கப்பட்டன.
பூமியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. மக்கள் அவனது பெயரால் பூமியை பிருத்வி என அழைத்தனர். அந்தப் பெயரே, பூமியின் ஆன்மிகப்பெயராக இன்றுவரை நிலைத்து விட்டது.