ஒரு தேவதை காலையில் காட்டு வழியேப் பறந்து கொண்டிருந்த போது, குள்ளன் ஒருவனைச் சந்தித்தது.
அது அவனை நோக்கி, “குள்ளனே, நான் உனக்கு இரண்டு வரம் தருகிறேன். உனக்கு என்ன தேவையோ கேள்; உன் தேவை பூர்த்தியாகட்டும்” என்றது
குள்ளன் தன் தலையைச் சொறிந்து கொண்டான்.
அது அவனைச் சிந்திக்கத் தூண்டியது, ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு அவன் கூறினான் :
“அப்படியென்றால் எனக்கு ஒரு கேன் நிறைய குளிர்ந்த பீர் வேண்டும்!”
ஒரு டேங்க் நிறைய குளிர்ந்த பீர் அவன் எதிரே வந்தது.
தேவதை கூறியது:
“இந்த டேங்க் பீர் வசீகரிக்கப்படுத்தப்பட்டது. எப்போதுமே காலியாகாது. இதிலிருந்து பீர் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும், நீ விரும்பும் வரை இதிலிருந்து குடிக்கலாம், இதனால் எந்தவித நோயும் உன்னை அணுகாது, கொஞ்சம் இதிலிருந்து ருசித்தாலும் போதும்; இதன் சுவயை நீ மறக்க மாட்டாய், உன்னுடைய தாகத்தை இது தணித்துவிடும். மேலும், இதை நீ பருகிக் கொண்டே இருக்கப் போகிறாய்!”
அதனைக் கேட்ட அந்தக் குள்ளன் மிகவும் மகிழ்வுற்றான்.
சிறிதளவு பீர் எடுத்துப் பருகினான். தன் நாவைக் கொண்டு உதடுகளை ருசி பார்த்தான். அவனுக்கு மிக மிக திருப்தி ஏற்பட்டது.
தேவதை அவனைப் பார்த்துச் சொன்னது;
“ இரண்டு வரத்தைக் கொடுத்தேன், ஒன்றைப் பெற்றுக் கொண்டாய்; மற்றொன்றைக் கேள்!”
அந்தக் குள்ளன் மிகவும் மகிழ்ந்தவனாய், “அப்படியா? அப்படியென்றால் எனக்கு மற்றோரு பீர் டேங்க் வேண்டும், இதே போல!”
ஓஷோ கூறுகிறார்;
“பேராசை முட்டாள்தனமானது, பேராசை கொண்டவன் அறிவுப் பூர்வமாகச் செயல்படவே மாட்டான், விவேகமுள்ளவன் தனக்கு என்ன தேவை? என்பதை நன்கு அறிந்தவனாக இருப்பான்”