ஒரு வியாபாரி நெய்யில் கலப்படம் செய்து விற்று வந்தான்.
மக்கள் புகார் அளித்தனர். அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிபதி முன்னர் நிறுத்தப்பட்டான்.
நீதிபதி அவனுக்கு மூன்று தண்டனைகளைச் சொல்லி, அவற்றில் ஏதாவதொன்றை ஏற்கலாம் என்றார்.
ஒன்று, அவன் விற்கும் நெய் முழுவதும் அவனேக் குடிக்கவேண்டும் அல்லது இரண்டு, 100 கசையடி பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மூன்று 100 பொற்காசுகள் அபராதமாகச் செலுத்த வேண்டும்.
முதலில் அவன் நெய் குடிக்க விரும்பினான். ஆனால் நாற்றம் வீசும் நெய்யை அவனால் குடிக்க முடியவில்லை.
சரி என கசையடிக்குத் தயார் என்றான்.
ஆனால், இருபது கசையடிக்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை.
அதனால் அபராதம் செலுத்திவிட்டுப் போவதாகக் கூறினான்.
நீதிபதியும் ஒப்புக்கொள்ள அபராதம் செலுத்திவிட்டு வெளியே வந்தான்.
முதலிலேயே அவன், தன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு அபராதத்துடன் வெளியே வந்திருக்கலாம்.
அவன் மட்டுமில்லை, நம்மில் பலரும் அப்படித்தான்.
துன்பம் வரும்போது முதலிலே கடவுளை வேண்டி பயன் பெறாது... கடைசியில் இறைவனிடம் சரணடைகிறோம்.