ஒருமுறை, எதிரிப் படைகளிடம் சிக்கிக் கொண்ட ஒரு படைவீரரை, போர்க் கைதிகளுக்கான சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
அவருக்கு போரில் பலமான காயங்கள் பட்டிருந்ததால், நோய்த்தொற்று ஏற்பட்டு, அவருடைய ஒரு காலை வெட்டி எடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.
அதனால் சிறைக் காவலாளியிடம், ‘இந்த வாரம் என்னுடைய ஒரு காலை வெட்டி எடுக்கப் போகிறார்கள். என்னுடைய கால் என் சொந்த மண்ணில் புதைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
அவர் மேல் அனுதாபப்பட்ட சிறைக் காவலாளியும் இதற்கு ஒப்புக் கொண்டு, கால் வெட்டப்பட்டவுடன், அதைப் படைவீரரின் தாய்நாட்டுக்குத் தபாலில் அனுப்பி வைத்தார்.
இன்னும் சில நாட்கள் கழித்து, படைவீரரின் இன்னொரு காலிலும் நோய்த் தொற்று ஏற்பட்டு, அந்தக் காலையும் வெட்டிவிட்டார்கள்.
அந்தக் காலையும் இதேபோல தபாலில் சிறைக் காவலாளி அனுப்பி வைத்தார்.
இதேபோல படைவீரர் உடலின் ஒவ்வொரு பாகமும் நோய்த்தொற்றினால் வெட்டப்பட்டதும், அவற்றை இவர் தபாலில் அனுப்பி வந்ததும் நடந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்து சந்தேகப்பட்ட சிறை அதிகாரி சிறைக் காவலாளியிடம் ‘என்ன நடக்கிறது’ என்று கேட்டார்.
அதற்குக் காவலாளி, ‘இந்தப் படைவீரரின் வேண்டுகோளுக்கிணங்க, நான் இவரது வெட்டப்பட்ட உடல் பாகங்களை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னார்.
அதைக் கேட்ட அதிகாரி கோபத்தின் உச்சிக்கேச் சென்று, ‘முட்டாளே! இவன் துண்டு, துண்டாகத் தப்பித்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா?’ என்று கத்தினார்.
நாம் எதையுமே சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறோம்.