ஒரு மனிதருக்கு தன் மனைவியுடன் தீராத சண்டை இருந்து வந்தது.
அப்போது அந்த ஊரில் ஒரு சாது, நகரின் ஒதுக்குப்புறமாகத் திரிந்து கொண்டிருந்தார்.
எனவே, அந்த மனிதர் அந்த சாதுவிடம் சென்று வணங்கி, ‘சாமி, என் மனைவி என் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறாள். தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து தப்பிக்க, என் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு சொல்லுங்களேன்!’ என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சாது சொன்னார், ‘ஏய் முட்டாளே! இதற்குத் தீர்வு சொல்ல முடிந்தால், நான் எதற்கு இங்கே சாதுவாகி உட்கார்ந்திருக்கிறேன்?’ என்றார்.