மார்க்ட்வெயின் ஒரு வரலாற்று இயலாளர், பயணி.
பொதுவுடமை பற்றிக் கேள்விப்பட்டு ரொம்ப உற்சாகமாக இருந்தார் மார்க் ட்வெயின்.
தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்வது எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று நினைத்திருந்தார்.
இந்த உலகத்தில் இதைவிடச் சிறந்த ஒன்றைக் கேட்டுவிட முடியுமா என்று புளகாங்கிதம் அடைந்தார்.
பொதுவுடமைப் பெரும் புரட்சி நடந்திருந்த ரஷ்யாவிற்குப் பயணப்பட முடிவு செய்தார்.
கிராமச் சாலைகள் வழியே நடந்து போனார்.
ஒரு வயதானவர் இரு கோழிகளைக் கையில் வைத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்து ஓடிச்சென்ற மார்க், “தோழரே, நீங்கள் உண்மையான பொதுவுடமைவாதியா?” என்றார்.
அவர் "ஆம்” என்றார்.
"உங்களிடம் இரு வீடுகள் இருந்தால், இல்லாதவர் ஒருவருக்கு ஒன்றைத் தந்து விடுவீர்களா என்ன?”
“ஆம்! நிச்சயமாக. நான் ஒரு பொதுவுடமைவாதி!”
“உங்களிடம் இரு வாகனங்கள் இருந்தால் அதில் ஒன்றை இல்லாதவருக்கு அளிப்பீர்களா?”
“நிச்சயமாக, நான் ஒரு பொதுவுடமைவாதி!”
கேள்வி பதில் நீண்டது.
இறுதியாக மார்க் ட்வெயின்... “நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை என்றால், உங்களிடம் இருக்கும் இரு கோழிகளில் ஒன்றினை இல்லாதவர் ஒருவருக்கு அளிப்பீர்களா?”
“என்ன இது? மடத்தனமாகக் கேள்வி கேட்கிறீர்கள்? என்னிடம் இருப்பதே இந்த இரு கோழிகள்தான்!” என்றார் கோழிக்காரர்.