பகவான் கிருஷ்ணர் பாண்டவர்களுக்குத் தூது சென்றார்.
“பாண்டவர்கள் நீசொன்னபடியே வனவாசமும், அஞ்ஞாத வாசமும் முடித்துவிட்டனர். இப்போது அவர்களுடைய இராஜ்யத்தை திருப்பிக் கொடுத்துவிடு” என்றார்.
“அது தான் சரி. அப்படியேச் செய்ய வேண்டும். சூதாட்டத்தின் போது அப்படித்தான் சொன்னாய்” என்று அங்கிருந்தவர்கள் பலரும் துரியோதனனுக்கு நினைவுபடுத்தினார்கள்.
ஆனால் அவனோ “பாண்டவர்களுக்கு இராஜ்யத்தை திருப்பித் தரமாட்டேன்” என்றான்.
“அப்படியானால் அவர்களுக்கு ஐந்து ஊர்களையாவது கொடு” என்றார் பகவான்.
“கொடுக்கமாட்டேன்” என்று மறுத்தான் துரியோதனன்.
“ஆளுக்கு ஒன்று என்று ஐந்து வீடுகளையாவது தா” என்று கேட்டார் பகவான்.
“மாட்டேன், ஓர் ஊசிமுனை அளவுள்ள மண்ணைக்கூட அவர்களுக்காக விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கொக்கரித்தான் துரியோதனன்.
முடிவு என்ன ஆனது?
பாரதப்போர். அவனும் அவன் குடும்பமும் அழிந்து போனார்கள்.
அதனால் தான் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.