திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர். அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்கக் கூடது என்பதுதான் அந்தப் போட்டி.
போட்டி துவங்கிய சில மணி நேரத்திலேயேக் கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நினைவுக்கு வரவே கதவைத் திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.
சில மணி நேரத்தில், அந்தப் பெண்ணின் பெற்றோர் கதவைத் தட்டினர். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதைப் பார்க்க முடியாமல் கண் கலங்கிக் கொண்டே என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது என்று கூறியபடிக் கதவைத் திறந்து விட்டாள்.
கணவரும் ஒன்றும் சொல்லவில்லை.
சில வருடங்கள் சென்றன. அவர்களுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.
அவள் கணவரும் தனக்கு மகள் பிறந்ததைக் கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு செய்தார்.
மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.
அன்று இரவு, அவர் மனைவி நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே என்று கேட்டார்.
அதற்கு அவள் கணவர், “என் மகள் தான் நாளை எனக்காகக் கதவைத் திறப்பாள்” என்றார்.