ஒரு மனிதனுக்கு அதிகமான கவலைகள் இருந்தன. அதைத் தீர்க்க ஒரு நண்பரின் அறிவுரைப்படிக் கடவுளை நோக்கித் தவம் இருந்தான்.
பல வருடம் கழித்துக் கடவுள் அவன் முன்னே தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்?
உடனே அவன், “கடவுளே என்னைச் சுற்றி எல்லாரும் கவலை இல்லாமல் சந்தோசமா இருக்காங்க... ஆனால் நான் மட்டும் ஏகப்பட்ட பிரச்னையால் அவதிப்படுகிறேன்” என்றான். பின்னர் அவன், “நீங்கள் என் கவலைகளை எல்லாம் தீர்த்துவிடுங்கள், நான் துயரமே இல்லாத மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன்” என்றான்.
அதனைக் கேட்டுச் சிரித்த கடவுள், “ மகனே, கவலை இல்லாத மனிதனாக வாழ்வது உன் கையில்தான் உள்ளது அதை நான் செய்யமுடியாது” என்றார்.
அவன், “அப்படியென்றால் சரி, இந்த உலகத்துல குறைவான கவலையோடு யார் இருக்கிறாக்களோ, அவர்களை எனக்குக் காட்டுங்கள் அவர்கள் கவலையும் என்னுடைய கவலையும் இடம் மாற்றிவிடலாம்” என்றான். என்கிறான்.
உடனே கடவுள், “நான் உனக்கு ஒரு விசேஷ வரம் தருகிறேன். உன்னுடைய கவலைகளை எல்லாம் ஒரு மூட்டையாக கட்டிக்கொள். அந்த மூட்டையைச் சுமந்துகொண்டு ஊர் ஊராக நாடு நாடாகச் சுற்றி வா, நீ சந்திக்கிற ஒவ்வொரு மனிதனின் முகுகிலும் ஒரு கவலை மூட்டை இருக்கும் அதில் யாருடைய மூட்டை சிறியதாக இருக்கிறதோ, அதை நீ எடுத்துக்கொண்டு உன்னதை மாற்றிக்கொள்” என்றார்.
அவனும் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கிளம்பினான்.
அப்போது அவனிடம் இருந்தது தேங்காய் அளவு கவலை மூட்டை.
தன்னுடைய பணக்கார நண்பர்கள், சொந்தகாரர்கள் வீட்டுக்கெல்லாம் போனான். அவர்கள் எல்லாருமே கவலை இல்லாம சந்தோசமாக இருக்காங்க என்று நினைத்துக் கொண்டிருந்த அவன், முதல் வேலையாக, அவர்களைப் போய்ப் பார்த்தான்.
ஆனால், அவன் நினைத்தற்கு மாறாக, அவர்கள் அனைவரிடமும் பானை, யானை என்று பெரும் கவலை மூட்டைகளை வைத்திருந்தனர். அதைக் கண்டு திகைத்துப் போன அவன் அனைத்து மனிதர்களையும் ஊர் ஊராகச் சென்று பார்த்தான். அவர்கள் எல்லோரிடமும் கவலை மூட்டை, அவன் வைத்திருந்த மூட்டையை விட அதிகமாக இருந்தன. ஒரு சிலரிடம் அவனது கவலை அளவு இருந்தது.
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, கவலைகளே இல்லாத மனிதர்கள் எவரும் இல்லை, மேலும் நம்மை விடப் பிறர் அதிகத் துன்பத்தில்தான் இருக்காங்க... என்பதை உணரத்தான் கடவுள் இந்த வரத்தைக் கொடுத்திருக்கார்.
அவ்வளவுதான் கவலையைத் தூக்கியெறிந்துவிட்டு, மகிழ்ச்சியாய் வீடு திரும்பினான்.