வீண் பெருமைக்காகத் தான தர்மம் செய்யும் செல்வந்தர் ஒருவர் இறந்த பின் சொர்க்கத்தை அடைந்தார்.
தேவலோகக் காவலர்கள் அவனை உள்ளேக் கூட்டிப் போயினர்.
வழியில் ஆடம்பரமான மாளிகைகள் நிறைய இருந்தன. அவற்றை எல்லாம் கடந்து சென்று, ஒரு குடிசை முன் செல்வந்தரை அழைத்துச் சென்றனர்.
“இதுதான் நீங்கள் தங்கவேண்டிய இடம்..!’ என்றனர்.
“எத்தனையோ அரண்மனைகள் இருக்க, ஏன் இப்படி ஒரு குடிசையில் என்னை இருக்கச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் அந்தப் பணக்காரர்.
“அவையெல்லாம் மனப்பூர்வமாகத் தானம் செய்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டவை” என்று அவர்கள் சொல்லத் தலை குனிந்தார் அந்தப் பணக்காரர்.