ஒருமுறை அப்பாசிய கலீபா ஹாருன் அல் ரஷீத் சபைக்கு வந்ததும் எல்லோரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர்.
பின்னர் கலீபா தம் ஊழியன் கொண்டு வந்த பையிலிருந்து ஒவ்வொரு வைரக்கல்லாக எடுத்துப் பிரதானிகள் எல்லோருக்கும் கொடுத்தார்.
எதற்காக தருகிறார் கலீபா என்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்தனர் பிரதானிகள்.
பின்னர் பிரதானிகளை பார்த்து, எல்லோரும் தம் கைகளிலுள்ள வைரக்கற்களை ஓங்கி அடித்து உடைத்தெறியுங்கள் என்றார் கலீபா.
எல்லோரும் இவ்வளவு விலை உயர்ந்த கற்களை எப்படி உடைப்பது என்று திகைத்து போய் நிற்க, ஆணை பிறந்த அடுத்த கனம் சடார் என்று ஒரு சத்தம் கேட்டது.
ஓங்கி உடைத்தவர் அபூநவாஸ்.
எல்லோரும் உடைக்காதிருக்க நீ மட்டும் உடைத்ததற்கு காரணம் என்ன? என்று கேட்டார் கலீபா.
அதற்கு, "கலீபாவின் சொல்லை உடைப்பதை விடக் கல்லை உடைப்பது மேல் என்று கருதினேன், உடைத்தேன்" என்றார் நகைச்சுவை மன்னர் அபூநவாஸ்.