இடமாற்றம் செய்வது ஏன்?
துறவி ஒருவர் தன் சீடர்களை அடிக்கடிக் காட்டுக்குள் அழைத்துப் போய் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து தியானிக்கச் சொல்வார்.
“கடவுள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதானே இருக்கிறார்... அவரை எங்கே இருந்து வழிபட்டால் என்ன? ஏன் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்?” என்று ஒரு சீடன் கேட்டான்.
“இறைவன் எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதான் இருக்கிறார். ஆனால் நாம்தான் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால் மனம் ஒன்றிடப் பழகும் வரை இடமாற்றம் அவசியமே!” என்றார் குரு.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.