நாம எல்லோரும் வெங்காயம் வெட்டும் போது எதற்குக் கண்ணீர் வடிக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா? அதற்குப் பின்னால் ஒரு வேடிக்கையான கதை இருக்குது... அந்த கதை இதுதான்.
ஒரு அழகான நகரத்தில் மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் முதல் ஆள் தக்காளி, இரண்டாவது ஐஸ் கிரீம், மூன்றாவது ஆள் வெங்காயம்.
அந்த நகரத்தில் குளிர்காலம் வந்துருச்சு, மூன்று நண்பர்களும் ஒன்றாக விளையாடி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அபர்கள் எங்கேப் போனாலும் ஒன்றாக மகிழ்ச்சியாக சென்று வருவார்கள்.
மெதுவாக பருவங்கள் மாற தொடங்கின. கடைசியாகக் கோடைக் காலம் வந்தது.
ஒரு நாள் மூன்று பேரும் ஒரு பூங்காவிற்கு சென்று விளையாட நினைத்தனர்.
கோடைக்காலத்தில் காலநிலை எப்படி இருக்கும் என்று ஐஸ்கிரீமுக்குச் சுத்தமாகத் தெரியாது, தன் நண்பர்களுடன் விளையாட ஐஸ்கிரீம் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டது.
சிறிது நேரம் கழித்து, ஐஸ்கிரீம் தன்னோட உடல் உருகுவதை உணர்ந்தது. தன்னோட நண்பன் நிலைமையைப் பார்த்து தக்காளியும், வெங்காயமும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
ஐஸ்கிரீம் முழுவதும் மொத்தமாக உருகிப் போனது. மற்ற இரண்டு பேரும் அழுது கொண்டே வீட்டுக்கு போக ஆரம்பித்தனர். அவர்கள் வீட்டுக்குப் போகும் வழியில் ஒரு சின்னப் பையன் ஒரு பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.
அந்தப் பையன் தக்காளியும், வெங்காயமும் தன் வழியில் வருவதைக் கவனிக்கவில்லை. அவன் தெரியாமல், தக்காளி வந்து கொண்டிருந்த திசையைப் பார்த்துப் பந்தை ரொம்ப வேகமாக வீசினான்.
வெங்காயம் அந்தப் பந்தைத் தடுக்க முயற்சி பண்ணிச்சு. ஆனால், அதனால் முடியவில்லை, அந்தப் பந்து வேகமா வந்து தக்காளி தலையில கடினமாகப் பட்டுப் போனது.
அதனால் தக்காளி கீழே விழுந்து நசுங்கி போனது. அந்த இரவு முழுவதும் வெங்காயம் தன்னோட இரண்டு நண்பர்களின் அழிவை நினைத்து மிகவும் சோகமாகப் போனது. ஒன்றுமே சாப்பிட வில்லை.
அது கடவுளிடம், “கடவுளே, என்னோட சிறந்த நண்பர்கள் இப்போது என்னுடம் இல்லை. நான் இப்போது இங்கேத் தனியாக அவர்களுக்காக வேதனைப்பட்டு அழுது கொண்டிருக்கிறேன், நாளைக்கு எனக்கு ஏதாவது ஆனால் எனக்காக அழுவதற்கு யாருமே இல்லை” என்று கேட்டது.
அப்போது வானத்தில் இருந்து ஒரு வெளிச்சம் வந்தது. அந்த வெளிச்சத்தில் இருந்து ஒரு குரல் வந்து சொன்னது. “வெங்காயமே, கவலைப்படாதே! உனக்கு நாளைக்கு ஏதாவது ஆனால் கண்டிப்பா உன்னைச் சுற்றி இருக்கிற எல்லோரும் அழுவார்கள்” என்று வெங்காயத்துக்கு ஒரு வரத்தைக் கொடுத்துவிட்டு அந்த குரல் போய்விட்டது.
அன்றிலிருந்து யார் வெங்காயம் வெட்டினாலும், அந்த வெங்காயத்திற்காக அழுவது இன்று வரை தொடர்கிறது.