தன் மனைவியை அளவுக்கு அதிகமாக நேசித்து வந்தான். இருப்பினும், அவ்வப்போது அவன் மனைவியைக் கடிந்து கொள்வான்.
மனைவி ஒருநாள் கணவனிடம் கேட்டாள், “ஏங்க என்னை இப்படிக் கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...? என்னைக் கொஞ்சம் சுதந்திரமாக இருக்க விடலாமே...!”
ஆனால் அதைக் கணவன் சற்று கஷ்டமாகவே உணர்ந்தார். இதை எப்படி இவளுக்குச் சொல்லிக் கொடுப்பது என யோசித்தார்.
ஒரு நாள் மனைவி தன் கணவனிடம் வந்து, “ஏங்க நான் பட்டம் விட்டு விளையாடப்போகிறேன், நீங்களும் வாங்க...” என அழைத்துக் கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்.
பட்டத்தை நூலில் கட்டிப் பறக்கவிட்டு மகிழ்ந்தாள்.
அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் கணவன், “பட்டம் மேலேப் பறக்கப்பறக்க அழகாய் இருக்கிறது. ஆனால், அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை. அதற்குத் தடையாய் இருப்பது என்ன?” எனக் கேட்டார்.
உடனே மனைவி, “இந்த நூல்தான், அதைத் தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது” என்று சொன்னாள்.
“அப்படியா?” எனக் கேட்ட கணவன், அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார். பட்டமும் தன் இஷ்டப்படி பறந்தது. ஆனால், சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய்க் கீழே வந்து விழுந்தது.
”என்னங்க இப்படி நூலை அறுத்து விட்டுட்டீங்க, பட்டம் பறக்க முடியாமல் கீழே வந்து விழுந்துவிட்டதே?” என்றாள் மனைவி.
உடனேக் கணவன், “இந்த நூல் பட்டத்தை தன் இஷ்டப்படி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூலே உதவியாய் இருந்தது. இந்த நூலைப் போலத்தான் உன் கணவனாகிய நானும்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சைக் கேட்டு அதன்படி நடக்கும் வரை என் பாதுகாவலுடன் உயர உயரப் பறக்கலாம்... உன் நினைப்புப்படி இருந்தால் நூலறுந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல ஆகிவிடும்...” என்றார்.