ஒரு முனிவர் ஒருவர் ஆற்றங்கரை வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
ஒரு மறைவில் கழுதை ஒன்று அலறும் குரல் கேட்டு அங்கு சென்று பார்த்தார்.
அங்கே ஒருவன் குண்டாந்தடியால் ஒரு கழுதையை அடித்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்து பதறிய முனிவர், அவனிடம் சென்று, "ஏனப்பா ஒரு வாயில்லா ஜீவனை இப்படியா அடிப்பது...? அடி உதை எப்போதும் பிரச்சனையைத் தீர்க்காது, அது விரோதத்தைத்தான் தூண்டும். அந்தக் கழுதையை விட்டுவிடு... வன்முறை வன்முறையைத்தான் வளர்க்கும்" என்றார்.
அதற்கு அவன், “அதைத்தான் சாமி, என்ன உதைச்ச இந்த அறிவு கெட்ட கழுதைக்குப் பாடமாச் சொல்லிக்கிட்டு இருக்கேன்..." என்றான்.