மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றியது? என்பதே அது.
அம்மாவைக் கேட்டான்.
அம்மா சொன்னாள்:
“கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"
அந்தப் பையனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பாவிடம் போய் அதேக் கேள்வியைக் கேட்டான்.
அவர் சொன்னார்:
"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"
அவனுக்குச் சரியாகப் புரியவில்லை. திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்.
"என்னம்மா நீ...? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்... அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்... இருவரில் யார் சொல்வது சரி...?”
இரண்டு பேர் சொல்வதும் சரிதான்டா...! என் முன்னோர்கள் ஆதாம், ஏவாள் பரம்பரை... உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை...!