அர்ச்சுனனுக்கு கீதையைப் போதித்தான் கிருஷ்ணன்.
கீதை முடிந்ததும், தேரின் மேற்பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டான் கிருஷ்ணன்.
அந்த நேரத்தில், அர்ச்சுனனின் மகன் அபிமன்யு கொல்லப்பட்டான்.
அர்ச்சுனனுக்கு சோகம் தாங்கவில்லை, கண்ணீர் வழிந்தது.
சிறிது நேரத்தில், அவன் மீது, மேலிருந்து சில சொட்டு தண்ணீர் சூடாக விழுந்தது.
அர்ச்சுனன் ஏறிட்டுப் பார்த்தான்.
கிருஷ்ணனின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் தன் மீது பட்டதை அறிந்து, "கிருஷ்ணா! என் மகன் இறப்புக்காக நான் அழுகிறேன். நீ ஏனப்பா அழுகிறாய்?'' என்று கேட்டான்.
"இவ்வளவு நேரம், வாழ்வின் நிலையாமை பற்றி உனக்கு கீதை சொன்னேனே, அதை நினைத்துக் கண்ணீர் வடிக்கிறேன்'' என்றார் கிருஷ்ணன்.