அமெரிக்காவில் கடும் பனி இரவில், தன் வீட்டின் முன் ஏழை முதியவர் ஒருவர் இருப்பதைக் கவனித்தார் ஒரு செல்வந்தர்.
முதியவருக்கு அருகில் வந்து கேட்டார் , "வெளியே குளிர்... உங்களுக்கு சூடான உடைகள் இல்லையா? உங்களுக்குக் குளிர் இல்லையா?"
அதற்கு அந்த முதியவர், "எனக்குச் சூடான உடைகள் இல்லை, ஆனால் நான் இப்போது அதற்கு பழக்கப்படுகிறேன்" என்று பதிலளித்தார்.
உடனே அந்த செல்வந்தர், "நான் வரும் மட்டும் காத்திருங்கள். நான் உங்களுக்குக் குளிர் தாங்கும் ஆடையைக் கொண்டு வந்து தருகிறேன்" என்றார்.
அந்த முதியவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
அந்த பணக்கார மனிதர் வீட்டிற்குள் சென்றதும், தன் வேலையால் அந்த முதியவரை மறந்து விட்டார்.
காலையில் அவருக்கு அந்த முதியவருக்குத் தான் ஆடை கொடுப்பதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.
அவர் உடனடியாக, ஒரு நல்ல ஆடையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேச் சென்றார்.
ஆனால் அந்த முதியவர் குளிரால் இறந்துவிட்டார்.
அந்த முதியவரின் கையில் ஏதோ எழுதப்பட்டிருப்பதைப் பார்த்துப் படிக்கத் தொடங்கினார் செல்வந்தர்.
"எனக்குச் சூடான உடைகள் இல்லாத போது, என்னால் குளிருக்குப் போராட முடிந்தது. ஆனால், நீங்கள் எனக்கு உதவ வாக்குறுதி அளிக்கும் போது, நான் உங்கள் வாக்குறுதிக்கு அடிமையாகி, நான் குளிருக்கு எதிராக இருக்கும் திறனை இழந்து விட்டேன். என் உயிர் இன்னும் சற்று நேரத்தில் பிரிந்துவிடும்"
தன்னுடைய வாக்குறுதி ஒருவரின் உயிரைப் பறித்து விட்டதே என்று அந்தச் செல்வந்தருக்கு வருத்தமாகப் போய்விட்டது.
வாக்குறுதி அளிக்கும் முன், பொய்யான வாக்குறுதிகளை உருவாக்கும் முன் யோசியுங்கள். அது வாக்குறுதி பெறுபவரின் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.