ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன.
இரை தேடப் போகும் போது இருவரும் ஒன்றாகவேச் செல்வார்கள்.
செவ்வெறும்புக்கு உணவு கிடைக்காத நாளில் கட்டெறும்பு, தனக்கு கிடைத்த உணவைக் கொடுத்து உதவும். அது போலவே பதிலுக்கு செவ்வெறும்பும் கட்டெறும்புக்கு உதவும்.
ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை.
கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தன.
இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால், மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன.
திடீரென்று ஒரு பெருங்காற்று வீச, அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் விழுந்துத் துடிக்க ஆரம்பித்தன.
‘நண்பா இப்படி வந்து தண்ணீல விழுந்து விட்டோமே. இப்பொழுது என்ன பண்றது’ என்றது செவ்வெறும்பு.
‘நிச்சயம், எதாவது உதவி கிடைக்கும். அது வரை நீந்திக் கொண்டிருப்போம்’ என்றது கட்டெறும்பு.
நேரமாகிக் கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்திச் சோர்ந்து போயின.
‘நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்களெல்லாம் சக்தியில்லாமல் போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்கத்தான் போகிறேன்’ என்றது செவ்வெறும்பு.
‘இல்லை இல்லை அப்படிச் சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு, நிச்சயம் ஏதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு.
‘இனி எந்த உதவியும் கிடைக்கப் போவதில்லை. நான் சாகத்தான் போகிறேன்’ என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது செவ்வெறும்பு.
ஏதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு.
ஒரு கட்டத்தில் கை, கால்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. இனி நம்மால் முடியாது. செத்துப் போய் விடுவோமோ என்று அதற்கும் தோன்றியது.
‘செத்து போவதுக்காகவாப் பிறந்தாய். வாழ்க்கை என்றாலேப் பிரச்சனைகள் நிறைந்ததுதான். அதற்குப் பயந்தால் வாழ முடியாது. அதனால், துணிச்சலோடு போராடு’ என்று சொன்னது உள்மனசு.
கட்டெறும்பு துணிச்சலோடு போராடத் தொடங்கியது.
சிறிது நேரம் கழித்து. காற்று வீச, மரத்திலிந்து ஒரு இலை கட்டெறும்பு பக்கத்தில் விழுந்தது.
உடனே கட்டெறும்பு இலையில் ஏறி அமர்ந்து, அதை படகாகப் பயன்படுத்தி கரையை நோக்கி முன்னேறியது.
அதைக் கண்ட இருந்த மீன் ஒன்று கட்டெறும்பை பார்த்துச் சொன்னது:
‘நீ துணிச்சலோடு விடாமல் போரடினாய் அதனால் வென்றாய். வாழத்துகள் நண்பா...’