பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்.
‘காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன்’ என்று ஒருத்தி ஜன்னலை மூடச் சொன்னாள்.
‘காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன்’ என்று இன்னொருத்தி ஜன்னலைத் திறக்கச் சொன்னாள்.
கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்.
முதலில் ஜன்னலை மூடுங்கள்... ஒருத்தி செத்து விடுவாள். அடுத்து ஜன்னலைத் திறந்து விடுங்கள் இன்னொருத்தியும் செத்து விடுவாள். பிரச்சினை தீர்ந்துவிடும்.
இந்தப் பெண்களின் சண்டையை எப்படி நிறுத்துவது? என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
எப்படி அய்யா? இந்த மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது? என்று அந்தப் பெரியவரிடம் கேட்டார் கண்டக்டர்.
அதற்கு அந்தப் பெரியவர் கூறினார்:
அந்த ரெண்டு பெண்களோட புருஷன் நான்தான்!