ஒரு கிராமத்தின் கோயில் மணியைத் திருடிய ஒருவன், அங்கிருந்த மக்கள் பார்த்ததால், அவர்களிடமிருந்து தப்பித்து அருகிலிருந்த காட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.
ஆனால், அவன் எடுத்து சென்ற மணிச் சத்தத்தைக் கேட்ட ஒரு புலி, அவன் மீது பாய்ந்து, அவனை அடித்துக் கொன்றது.
அப்போது அவ்வழியாக ஒரு குரங்குக் கூட்டம் வந்தது.
அந்தக் குரங்குகள் அவனிடமிருந்த கோயில் மணியை எடுத்து விளையாண்டது. அந்தச் சத்தம், குரங்குகளுக்குப் பிடித்துப் போனதால், மணியை எடுத்துக் கொண்டு மலைமேலிருந்த தங்களோட இடத்துக்கு கொண்டு போனது.
குரங்குகள் தினமும் மணியை ஆட்டி ஆட்டி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.
அதனைக் கேட்டக் கிராம மக்கள் பயந்து, காட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அங்கு திருடனின் உடலைக் கண்ட அவர்கள், அவன் செய்துப் போய்விட்டான். ஆனால், தினமும் மணிச்சத்தம் கேட்குதே, இது ஏதோ கெட்ட ஆவி வேலையா இருக்குமுன்னு ஊரேப் பயந்தது.
ஆனால், அந்த ஊர்ல ஒரு வயதான பெண் மட்டும் பயப்படவில்லை. ஆவி என்று ஒன்றும் இல்லை.
இந்தச் சத்தம் வேறெதனால் வருகிறது என்று பார்க்க வேண்டும்னு தனியாகக் காட்டுக்குப் போனாள்.
காடு முழுவதும் சுற்றிக் குரங்குகள்தான் மணியை வைத்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்று கண்டுபிடித்தாள்.
உடனே அந்த வயதானப் பெண், நேராக அந்த ஊர் தலைவர்கிட்டப் போனாள்.
“ஐயா, இந்தக் கெட்ட ஆவியைப் பூஜை பண்ணிப் போக வைத்து விடலா. ஆனால், சிறிது பணம் செலவாகும். நீங்கள் பணம் தந்தால், நானே அந்த ஆவியை விரட்டிடுவிடுவேன்” என்று சொன்னாள்.
ஊர்த்தலைவரும் ஆவியைப் போக வைக்கப் பணம் தந்தார். அந்த வயதானப் பெண் அந்தப் பணத்தில் வேர்க்கடலை, பட்டாணி, பழம் என்று சாப்பிடுகிற பொருளா வாங்கினாள். ஊர்மக்கள் முன்பு வைத்துப் பூஜை பண்ணிணாள். அந்தப் பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு காட்டுக்குள் போனாள்.
அங்கே மலையின் மேல் ஒரு மரத்தடியில் அந்தப் பொருளையெல்லாம் வைத்துவிட்டுச் சிறிது தொலைவில் போய் நின்றாள்.
குரங்குகள் சாப்பிடுகிற பொருளைப் பார்த்தது ஓடி வந்தன.
அந்தக் குரங்குகள் சாப்பிடுவதற்காக மணியைக் கீழே போட்டுட்டு போயிடுச்சுங்க... உடனே, அந்த வயதானப் பெண் அந்த மணியை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தாள்.
இனிமேல் மணி சத்தம் வராது... எல்லாம் சரியாகிவிட்டது என்று சொல்லி மணியை ஊர்த்தலைவரிடம் தந்தாள்.
அந்த ஊரே அந்த வயதான பெண்ணைப் பாராட்டியது.