மாமனாருடன் மருமகன்கள் உணவு உண்ணும் போதெல்லாம் அவனுக்கு ஒரு ஒதுக்குப்புறமான இருக்கையே கிடைத்தது.
இதனால் அவமானமுற்ற அவன் மனைவி, ஒருநாள் மதிப்புமிக்க இருக்கையில் கெளரவமான ஆசனத்தில் எல்லோருக்கும் முன்னதாக ஓடிச் சென்று அமரும்படி தன் கணவனுக்கு ஆய்வுரை கூறினாள். ஆனால், அந்த ஆய்வுரையை அவன் முற்றுமாகப் புரிந்து கொள்ளவில்லை.
பின்னர் ஒருமுறை அவன் தன் மனைவியுடன் தன் மாமனார் இல்லம் சென்றபோது, விருந்தினர்கள் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
உடனே அந்த இளைஞனின் மனைவி, அவனைத் தலைமை இருக்கைகுச் சென்று அமரும்படி சைகை செய்தாள்.
அவள் கணவனோ இருக்கைகளின் உயரத்தில் வேறுபாடு இருப்பதைக் கண்டான்.
அத்துடன் ஏணிப்படி ஒன்று உணவுக் கூடத்தில் இருப்பதைக் கவனித்தான். ஒரே ஓட்டமாக ஓடி அந்த ஏணிப்படிகளில் விரைந்து ஏறி பாதிப் படிகளைக் கடந்தான்.
இதனைக் கண்ட அவன் மனைவி அவனை முறைத்துப் சினத்துடன் பார்த்தாள்.
ஆனால் அவள் பார்வையின் பொருள் புரியாதபடி, “எவ்வளவு உயரம் ஏற வேண்டும் என்று நீ விரும்புகிறாய்; விண்ணகத்தை எட்டிப் பிடிக்கும் மட்டுமா?” என்று அவன் உரத்த குரலில் கேட்டான்.
செய்வதறியாது, திகைத்தாள் அவன் மனைவி.