சக்துப் பிரஸ்தர் என்று ஒரு அந்தணர் இருந்தார். அவர் மநு நீதி சொன்னபடி விருந்தோம்பும் பண்புடையவர். மேலும் யாசகம் செய்யாவிடில் தானியங்களைப் பொறுக்கி எடுத்தும் வாழலாம் என்று மநு சொல்லியபடி வாழ்க்கை நடத்தியவர். எங்கும் யாசகம் செய்யாமல் வயல்களிலும் வனங்களிலும் விழும் தானியத்தைச் சேகரித்து வாழ்க்கை நடத்தினார்.
தினமும் விருந்தினர்களையும் உபசரித்தார்.
ஒரு நாள் சாப்பிடப் போகும் முன் ஒரு விருந்தினர் வந்தார்.
அவருக்கு வழக்கமான உணவைப் போட்டும் பசியாறவில்லை. உடனே தனது உணவையும், பின்னர் மகனின் உணவையும் அளித்தார். அப்பொழுதும் விருந்தாளி மேலும் உணவை எதிர்பார்த்து உட்கார்ந்து இருந்தார். உடனே மனைவி, மருமகள் உணவையும் அளித்தார்.
அப்பொழுதுதான் அந்த புண்யாத்மா வயிற்றைத் தடவிக்கொண்டு ஒரு ஏப்பம் விட்டு எழுந்தார். ‘அன்னதாதா சுகீ பவ’ என்று வாழ்த்தினார்.
இதை எல்லாம் பார்த்த இந்திரன் அவருக்கு எல்லாச் செல்வத்தையும் அளித்து அனுக்கிரஹித்தார்.