ஒரு ஒன்பது வயதுச் சிறுவன், சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டிருந்தான். திடீரென, கால்களுக்கு நடுவில், நீர் தேங்கியிருந்ததைக் கண்டான். அவனுடைய காற்சட்டை ஈரமாக இருந்தது. இதயம் நின்றுவிடும் போல் ஒரு பயம். வாழ்க்கையில் அவனுக்கு நடந்த இந்த சம்பவம் கவலையைத் தந்தது. வகுப்புத் தோழர்களுக்குத் தெரிந்தால், அதைப் பற்றியேப் பேசிக் கேலி செய்வார்கள் என்று பயந்தான்.
அதேத் தோழிகளுக்குத் தெரிந்தால், அவனிடம் பேசவே மாட்டார்கள் என்ற பயம் மற்றொரு பக்கம் இருந்தது.
அவன் தலையைக் குனிந்தவாறு பயத்துடன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். “அன்புள்ள கடவுளே, நான் ஒரு நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். உடனடியாக உதவி தேவை. இன்னும் ஐந்து நிமிடத்தில் உதவி பண்ணவில்லை என்றால் எனக்கு மிகவும் கஷ்டமாகிவிடும்”
பிரார்த்தனைக்குப் பிறகு பார்க்கும் பொழுது ஆசிரியர் அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.
கண்களைப் பார்த்த பொழுது விஷயம் தெரிந்து விட்டது என்று தோன்றியது.
ஆசிரியருடன் அவன் தோழி கல்பனாவும் வந்துக் கொண்டிருந்தாள்.
அவள் கையில், ஒரு ஜாடியில் தங்க மீன் நீந்திக் கொண்டிருந்ததைக் கண்டான். அருகில் வந்தவுடன் காரணம் ஏதுமின்றி, அவன் மடியில் அந்த ஜாடியைச் சாய்த்தாள்.
உடனடியாக சிறுவன் கோபம் வந்ததைப் போல் நடித்தாலும், மனதிற்குள் கடவுளிடம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருந்தான்.
இவ்வளவு நேரம் எல்லோரும் அவனைக் கேலி செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுது, நிலைமை மாறிவிட்டது. எல்லோரும் அவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.
ஆசிரியர் அவனைக் கீழே அழைத்துச் சென்று, வேறு ஒரு காற்சட்டையை அணிந்து கொள்ளச் சொன்னார். மற்றக் குழந்தைகள் எல்லோரும் மேஜைக்குக் கீழ் இருக்கும் நீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கையின் திசையே மாறிவிட்டது. அவனைக் கேலி செய்வதற்கு பதில், எல்லோரும் கல்பனாவைப் பார்த்துக் கோபமுற்றார்கள்.
கல்பனா உதவி செய்ய முன் வந்த பொழுது, எல்லோரும் அவளைத் திட்டினார்கள். சாயங்காலம் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது சிறுவன் கல்பனாவிடம், “நீ வேண்டுமென்றுதானே அந்தச் செயலைச் செய்தாய்?” என்றுக் கேட்டான்.
அதற்கு கல்பனா, “நானும் ஒரு முறை என் காற்சட்டையை ஈரமாக்கிக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.
அவளிடம் நன்றியை தெரிவித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.