மகான் ஒருவரைச் சந்தித்த அரசன், "சுவாமி, எனக்காக இறைவனிடம் வேண்டுங்கள்!' எனக் கோரிக்கை வைத்தான்.
"ஆண்டவா... அகிலத்தில் உள்ள அனைவரையும் நன்றாக வை!' என வேண்டினார் மகான்.
அரசனுக்கோ, தனக்காகத் தனிப்பட்ட முறையில் வேண்டவில்லையே, என்று மனக்குறை எழுந்தது.
அதனை உணர்ந்த மகான், “மன்னா, வயலில் நீர் பாய்ச்சும் போது, செடிகளின் வேரில்தான் நீர் விடப்படும். ஆனால், அது செடியின் முழுமைக்கும் பயன்படுகிறதல்லவா... அப்படித்தான் இதுவும். உலகில் உள்ள 'எல்லோருக்கும்' எனும் போது அதில் நீயும் இருக்கிறாய் அல்லவா!! அப்புறம் ஏன் தனியாக வேண்டிக் கொள்ள வேண்டும்?" எனச் சொன்னதும், அதிலிருந்த உண்மையை உணர்ந்தான் அரசன்.