சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எது வேகமாக ஓடும்? என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
போட்டி தொடங்கியது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை, தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.
போட்டியைப் பார்க்கக் கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம்.
“என்ன நடந்தது? ஏன் சிறுத்தை ஓடவில்லை?” என்று அங்கு இருந்த பெரியவர் ஒருவரிடம் கேட்ட போது, அதற்கு அவர் சொன்ன பதில்.
“சிறுத்தை அதன் வேகத்தை வேட்டை ஆடுவதற்கு மட்டுமேப் பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் அதற்கு இல்லை” என்று சொன்னார்.
ஆம், சில நேரங்களில் நாம் யார் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பதும் கூட தேவையில்லாததுதான்.