ஒருவர் மரணமடைந்து பரலோகம் கொண்டு செல்லப்படுகிறார்.
அவரை இரு தேவதூதர்கள் அழைத்து செல்கிறார்கள், உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய அறை அங்கு ஆயிரக்கணக்கான தூதர்கள் இருந்தனர்.
அறையின் மத்தியில் பெரிய மேசை. அதில் மலை போல் கடிதங்கள் குவிந்திருந்தன.
அதைப் பார்த்து, அந்த மனிதன், “என்ன இது?” என்று தன்னை அழைத்து வந்த தூதர்களிடம் கேட்க, அதற்கு அவர்கள், “இவை எல்லாம் பூமியில் உள்ள மனிதர்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்கள். இதைப் படித்து இயேசுவிடம் சொல்லும் பணியைத்தான் இவர்கள் செய்கிறார்கள்” என்றனர்.
அந்த அறையை கடந்து அடுத்த அறை சென்றனர்.
அங்கும் அதே காட்சியை கண்டு, “இது என்ன?” என்று கேட்டார்.
அதற்குத் தூதர்கள் மனிதர்களின் விண்ணப்பங்களுக்கு இயேசு கூறிய பதில்களை, அவர்களுக்கு அனுப்பும் பணி இங்கு நடைபெறுகிறது என்று கூறி அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த அறை முன்பு பார்த்த இரண்டு அறைகளைக் காட்டிலும் பெரிய அறையாகவும், தூதர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தன.
ஆனால் மேஜையில் இரண்டு கடிதம் மட்டுமே இருந்தது.
“இந்த அறை ஏன் இப்படி இருக்கிறது?” என்று கேட்க தூதர்கள் மனம் உடைந்து, இந்த அறை மனிதர்களுக்கு இயேசுநாதர் அளித்த பதில்களுக்கு மனிதர்கள் அனுப்பும் நன்றி விண்ணப்ப அறை. ஆனால் இங்கு விண்ணப்பங்கள் மிகமிகக் குறைவாகதான் வருகின்றன” என்றனர்.
ஆம், இன்று நம்மில் பலர் அது வேண்டும், இது வேண்டும் என்று விண்ணப்பம் வைக்கிறோம். நம் விண்ணப்பதைக் கடவுள் நிறைவேற்றியவுடன் கடவுளையே மறந்து விடுகிறோம். அவர் நமக்குச் செய்த, செய்து கொண்டு இருக்கிற, செய்யப் போகிற எல்லாவற்றிற்காகவும் நன்றி கூறுவோம்.