பசியோடிருந்த நரி ஒன்று வழியில் வந்த வாத்துக் கூட்டத்தைப் பார்த்ததும் நயவஞ்சகத்துடன், ‘எங்கள் குல வழக்கபடி ஒரு வாத்தை சாப்பிட்டுச் சென்றால்தான் எங்கள் சாமி அருள் புரியும் சீக்கிரம் உங்களில் யாரெனச் சொல்லுங்கள்’ என்றது.
புத்திசாலி வாத்து ஒன்று, “நரியாரே! எங்கள் குல வழக்கபடி யாராவது இறக்கும் முன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வாத்து தேவனைப் பிரார்த்திப்போம்” என்றது.
‘அதற்கென்ன பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்’ என்றது நரி.
வாத்துக்கூட்டம் மொத்தமும் ‘க்வாக்’ ‘க்வாக்’ என்று பிரார்த்திக்க பக்கத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த உரிமையாளன், வாத்துகளுக்கு ஏதோ பிரச்சனை என்று ஓடி வந்தான்.
அங்கே நரியைக் கண்ட அவன், தன் கையிலிருந்த தடியை நரியை நோக்கி வீசினான்.
நரி காலில் அடிபட்டுக் கத்தியபடி அங்கிருந்து ஓடியது.