ஒரு நாள் இரண்டு அறிமுகமில்லாதவர்கள் ஒரு நகரத்திலிருந்து தங்கள் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
இருவரும் அறிமுகமாகிப் பேசிக் கொண்டே போனதால் பயணத்தின் களைப்பு தெரியாமல் இருந்தது. பாதி வழியைக் கடந்த போது ஒரு ஆறு குறுக்கிட்டது.
அவர்களின் ஒருவருக்கு நீச்சல் தெரியாது. ஆனால், இருவருக்குமே வேறு வழியில்லை ஆற்றைக் கடந்துதான் ஆக வேண்டும். ஆற்றிலோ நீரோட்டம் மிக வேகமாக இருந்தது. இருவரும் ஒன்றாக ஆற்றில் குதித்து நீச்சலடிக்க ஆரம்பித்தார்கள்.
நீச்சல் தெரிந்தவர் ஆற்றைப் பாதிக் கடந்த நிலையில் நீரோட்ட வேகத்தைப் பார்த்துப் பயந்து தன் தன்னம்பிக்கையை இழந்தார்.
நீரில் முச்சுத் திணறினார். அதேசமயம் நீச்சல் தெரியாதவர் பாதுகாப்பாக மறுகரைக்குச் சென்றிருந்தார்.
அவரின் சகபயணி நீரில் தத்தளிப்பதைக் கண்ட அவர் மீண்டும் நீரில் குதித்து அவரைக் காப்பாறினார்.
கரைக்கு வந்த பின் நீச்சல் தெரிந்தவர், நீச்சல் தெரியாதவரிடம் கேட்டார். உங்களுக்கு நீச்சலே தெரியாது என்றீர்கள், ஆனால் எப்படி பயமில்லாமல் பாதுகாப்பாக ஆற்றைக் கடந்து வந்தீர்கள்? எது உங்களுக்கு தைரியத்தைத் தந்தது?
அதற்கு நீச்சல் தெரியாதவர் சொன்னார். நண்பரே என் இடுப்பில் இருக்கும் பை, அதுதான் எனக்குத் தைரியம் தந்தது. அந்த பையில் நான் என் மனைவி குழந்தைகளுக்காகப் பல வருடங்களாக இரவும் பகலும் சம்பாதித்த பணம் இருக்கிறது.
நம் இலக்கின் மீது ஆழ்ந்து கவனம் செலுத்தினால் அதுவே நமக்கு வரும் இடைஞ்சல்களை எந்த பயமுமில்லாமல் கடக்க போதுமான தைரியத்தை தரும்.