ஒரு ஊரில் ஒரு ராசா இருந்தான். அவனுக்கு ஒரு பொண்ணு இருந்தாள்.
அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியரை நியமித்தான் ராசா.
அந்த ஆசிரியருக்கு அந்த பொண்ணு மேல விருப்பம்.
அந்தப் பெண்ணிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அவள் மறுத்தாள்.
அந்த ஆசிரியர் என்ன செய்தார் தெரியுமா? ராசாகிட்ட போயி உன் பொண்ணு ஜாதகத்தில் குற்றம் இருக்கிறது. அவளால் உனக்கும் இந்த நாட்டுக்கும் ஆபத்து. இதுலிருந்து நீயும், நாடும் தப்பிக்க வேண்டுமானால் அவளை ஒரு பெட்டியில வைத்து ஆற்றில் விட்டுவிடு என்றான்.
அதை நம்பிய ராசாவும் அப்படியேச் செய்தான்.
ஆற்றில் மிதந்து வந்த பெட்டியைக் காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்த ஓர் இளவரசன் பார்த்தான்.
அந்தப் பெட்டியைத் எடுத்துத் திறந்து பார்த்தான். அதில் ஓர் அழகான பெண் இருந்தாள்.
அவளிடம் கேட்டு உண்மையைத் தெரிந்து கொண்டான்.
பின்னர் அவளைத் திருமணம் செய்து கொண்டான்.
பின்னர் அவன் வேட்டையாடிய புலியைப் பெட்டியில அடைத்து ஆற்றில் விட்டான்.
காட்டில் காத்துக் கொண்டிருந்த ஆசிரியர், ஆற்றில் மிதந்து வந்த பெட்டியை எடுத்துக் கொண்டு போய் வீட்டில் வைத்தான்.
நல்லா அலங்காரம் செய்து கொண்டு, கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டான்.
ராசா மகளை அனுபவிக்கப் போகின்ற ஆசையில் பெட்டியைத் திறந்தான்.
அடைபட்டுக் கிடந்த புலி ஆசிரியர் மேல் பாய்ந்து கொன்றது.