ஒரு நகரத்தில் வெறிநாய்களின் தொல்லை அதிகமாக இருந்தது.
இரண்டு பணக்காரர்கள் வெறிநாய் ஒன்றால் கடிக்கப்பட்டு படுத்த படுக்கையில் இருந்தனர்.
அவர்களுக்குக் குழந்தைப்பேறு இல்லை என்பதால், சாகும் தருவாயில் அவர்கள் உயில் எழுத விரும்பினர்.
ஒரு பணக்காரர் தனது உயிலில், “வெறிநாய் கடிப்பதால் மிகுந்த அபாயம் ஏற்படுகிறது. ஆகவே, என் சொத்து முழுவதையும் அனைத்து வெறிநாய்களையும் பிடித்துக் கொன்று விடுவதற்குப் பயன்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
மற்றொரு பணக்காரன், "வெறிநாய் கடியால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பாற்ற மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி செய்வதற்கு, என் சொத்து அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்” என்று உயில் எழுதினான்.
முதல் பணக்காரரின் செயல் நல்ல செயலாக இருந்தாலும், பாவம் நிறைந்தது. இரண்டாவது பணக்காரரின் அனைவரும் பாராட்டும் வழியில் நற்செயலாக அமைந்து.