ஒரு பணக்காரப் பெண்மணி தன் காரில் சென்று கொண்டிருந்தார்.
வழியில் அவர் தேநீர் அருந்துவதற்காகச் சிறிது நேரம் நின்றார்.
அப்போது அவரிடம் ஒரு பிச்சைக்காரி நெருங்கி வந்து பிச்சை கேட்டாள்.
காரில் இருந்த பணக்காரப் பெண்மணி, அந்தப் பிச்சைக்காரியின் கையில் இருந்த குழந்தைகளும் உருக்கமாகப் பிச்சை கேட்டபோது அவர்கள் மீது இரக்கம் கொண்டார்.
அதனால் அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த திராட்சைகள் நிரம்பியப் பெட்டியை எடுத்து அந்தப் பிச்சைக்காரிக்குக் கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்ட பிச்சைக்காரி மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் வீட்டை நோக்கிச் சென்றாள்.
அந்தப் பணக்காரப் பெண்மணிக்கு, "இந்தப் பிச்சைக்காரி இவ்வளவு திராட்சையையும் என்னதான் செய்கிறாள் என்று பார்க்க வேண்டும்!' என்ற ஆவல் ஏற்பட்டது.
அவர் மிகுந்த ஆவலோடு அந்தப் பிச்சைக்காரியின் செய்கைகளைக் கவனிக்க ஆரம்பித்தார்.
தனது பகுதிக்குச் சென்ற பிச்சைக்காரி, அங்கிருந்த எல்லாக் குழந்தைகளையும் கூப்பிட்டாள், தன்னிடமிருந்த திராட்சைகளை அவள் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தாள்.
அப்போது அந்தப் பணக்காரப் பெண்மணிக்கு, 'யார் உண்மையான பணக்காரி?' என்ற கேள்விக்கு விடை தெரிந்தது.