ஒரு பணக்கார முதலாளிக்கு ஒரு அழகான பெண் ஒருவள் இருந்தாள்!. அவளுக்குத் திருமண வயது வந்து விட்டதால், திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார் அவளுடைய தந்தை. அதனை முன்னிட்டு ஊரில் இருக்கும் தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைத்து, அந்தப் போட்டியில் வெற்றி பெறும் இளைஞருக்குத் தன் மகளைக் கல்யாணம் செய்து வைப்பதாகவும் அறிவித்தான்.
போட்டி நடக்கும் நாளன்று, அந்த ஊரில் வசித்த திறமை வாய்ந்த, உடல் வலுவான, மிகவும் புத்திசாலியான இளைஞர்கள் அனவரும் ஒன்று கூடினர்.
சில இளைஞர்களின் கையில் பேனாவும், பேப்பரும் இருந்தது. சில இளைஞர்கள் கையில் வீச்சரிவாளுடனும், சில இளைஞர்களின் கையில் கத்தியுடனும், இன்னும் சில இளைஞர்களோ கையில் துப்பாக்கியுடன் வந்து இருந்தார்கள். அவர்கள் எல்லோரையும் தன்னுடைய மிகப்பெரிய நீச்சல் குளத்திற்கு அழைத்துப் போனான். அந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து மறுமுனைக்கு முதலில் யாரால் நீந்தி செல்ல முடிகிறதோ!, அந்த பையனுக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்றார்.
அந்தப் பெண்ணின் அப்பா சொல்லி முடித்த அடுத்த வினாடியே, அனைவரும் நீச்சலுக்குத் தயாராக இருந்தார்கள். அப்பொழுது அந்தப் பணக்கார மனிதன், “திருமணம் மட்டுமில்லை கூடவே கோடிக்கணக்கான ரூபாய் பணம், வசிக்க ஒரு தனி பங்களாவும் கூடத் தருவேன் என்றார்.
என்னுடைய வருங்கால மருமகனை இந்த நீச்சல் குளத்தின் மறுகரையில் சந்திக்கிறேன் என்று சொல்லியவாறு அந்த இடத்திலிருந்து நடந்து சென்றான். இப்படி அவர் சொல்லி முடித்தவுடன் மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக நீச்சல் குளத்தின் தண்ணீரில் இறங்க முற்பட்டனர்கள். அப்பொழுது அந்தப் பணக்காரனுடைய ஹெலிகாப்டர் மூலம், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, நிறைய முதலைகளை அந்தக் குளத்தில் கொட்டிவிட்டுச் சென்றது.
அதனைப் பார்த்த இளைஞர்கள் அத்தனை பேரும் மரண பயத்தில் உடனே பின் வாங்கினார்கள். அவர்கள் ஏமாற்றத்துடன் மீண்டும் தாங்கள் உடுத்தி இருந்த உடைகளை மாட்டிக் கொண்டார்கள். அந்தப் பணக்கார மனிதன், இளைஞர்களைப் பார்த்துச் சொன்னான். இது என்ன, பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது?. யாராலும் இந்தப் போட்டியை வெல்ல முடியாது. நிச்சயமாக எவனாலும் ஜெயிக்க முடியாது என்று சத்தமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது, உடனே ஒரு இளைஞன் நீச்சல் குளத்தில் குதிக்கின்ற சத்தம் கேட்டது. அருகில் இருந்த அத்தனை பேரும் திகைத்துப் போய் ஆச்சிரியமாக அந்த இளைஞனையே கண் இமைக்காமல் பார்த்தார்கள்.
அந்தக் குளத்தில் நீந்திய திறமையான இளைஞன், மிக சாதுரியமாக அத்தனை முதலைகளிடம் இருந்து விலகி, மிக வேகமாக நீந்தி மறு கரையில் சட்டென்று ஏறினான். அந்தப் பணக்கார மனிதனால் நம்ப முடியவில்லை. அவன் ஆச்சரியப்பட்டான். மிக அருமை!, என்று கூறினார் பணக்கார மனிதன். அவன் தருவதாகச் சொன்ன விஷயங்களுக்கும் மேல இன்னும் நிறைய தருகிறேன் என்றான்.
அந்த இளைஞனிடம் சென்று அவனைப் பார்த்து உனக்கு என்னென்ன வேண்டும் என்று சொல். அதனைத் தருவதற்குத் தயாராக உள்ளேன் என்றான். எதுவாக இருந்தாலும், அதனைத் தருவதற்குத் தயாராக இருக்கிறேன். அந்த இளைஞனோ இன்னமும் அந்த கடுங்குளிர் நடுக்கத்தில் இருந்து மீளவில்லை.
அவன் கண்கள் மிரட்சியில் அரண்டு போய் இருந்தன. அதன் பின், ஒரு மாதிரி முகப்பாவனையை மாற்றிக் கண்களில் வெறியுடன் கேட்டான். இந்த விஷயமெல்லாம் இருக்கட்டும், என்னை யார் இந்தக் குளத்தில் தள்ளி விட்டது?. முதலில் தள்ளிவிட்டவனை மட்டும் யாரென்று என்னிடம் காட்டுங்கள் என்றான் அந்த இளைஞன்.
ஹெலிகாப்டர் மூலம் அந்த நீச்சல் குளத்தில் கொட்டிய அனைத்து முதலைகளும் உயிரற்ற இரப்பர் முதலைகளே. ஆனால், இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயத்தில், போட்டியிலிருந்து பினாவங்கச் செய்துவிட்டது என்பதை அதுவரை யாரும் அறியவில்லை.