பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜீன் லூயிஸ் ஃபோரெய்ன் என்ற கலைஞர் மரணப் படுக்கையில் படுத்திருந்தார்.
அவரைச் சுற்றி அமர்ந்திருந்த அவருடைய மனைவியும் குழந்தைகளும் அவருக்குத் தைரியம் வரும் வகையில் பேசி வந்தார்கள்.
“நீங்கள் இப்போது மிகவும் ஆரோக்கியமாகக் காணப்படுகிறீர்கள்'' என்று அவருடைய மனைவி கூறினார்.
“போன வாரம் கூட நீங்கள் மிகவும் களைத்து காணப்பட்டீர்கள். அப்போது உங்களுடைய முகம் ரத்தத்தை இழந்து வெளுத்திருந்தது. இப்போது உங்கள் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து உங்கள் முகம் பழையபடி சிவப்பாகக் காட்சி தருகிறது” என்று அவருடைய மகள் கூறினாள்.
"முன்பு மூச்சு விடக் கூட முடியாமல் தடுமாறி வந்தீர்கள். இப்போது உங்களால் சுலபமாக மூச்சுவிட முடிகிறது" என்று அவருடைய மகன் கூறினான்.
ஃபோரெய்ன் கஷ்டப்பட்டு புன்னகை செய்து, "அப்படியா! கடவுளுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். நான் முற்றிலும் குணம் அடைந்த பிறகு சாகப் போகிறேன்!" என்று கூறினார்.