அரசர் நெப்போலியனுக்காகத் தலைநகரில் இருந்த செல்வர்கள் பெரிய விருந்து நடத்தினார்கள். அரசர் அதில் கலந்து கொண்டார்.
அங்கிருந்த ஒரு பெண்மணி, விலை உயர்ந்த ஏராளமான நகைகளைத் தலையிலிருந்து கால் வரை அணிந்திருந்தாள். எல்லோருடைய பார்வையும் அவள் மீதே இருந்தது.
அரசரும் அவளைப் பார்த்தார்.
தன் அருகிலிருந்த மெய்க்காப்பாளனைப் பார்த்து, "யாருடைய மனைவி அந்தப் பெண்மணி? இவ்வளவு அணிகலன் அணிந்திருக்கிறாள்?” என்று கேட்டார்.
“புகையிலை வியாபாரி ஒருவரின் மனைவி அவள்” என்று பதில் வந்தது.
மறுநாளே நெப்போலியன், "புகையிலை வணிகம் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்படும்” என்று சட்டம் கொண்டு வந்தார்.