துறவி துக்காராமின் எல்லையற்ற தெய்வப் பக்தியைக் கண்டு பேரரசர் சிவாஜி அவரிடம் பெரிதும் மரியாதை செலுத்தினார்.
தன் அரண்மனைக்கு அவரை அழைத்துப் பெரும் சிறப்பளிக்க வேண்டும் என்று நினைத்தார் சிவாஜி.
துக்காராமை நேரில் சந்தித்த சிவாஜி, தன் அரண்மனைக்கு வருகை தருமாறு வேண்டினார். அவரது அந்த வேண்டுகோளை மறுக்க இயலாத துக்காராமும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
குறிப்பிட்ட நாளில் துக்காராமின் வீட்டிற்குப் பல்லக்கு வந்தது.
வழி எங்கும் தன்னை வரவேற்க அலங்கார வளைவுகள், மற்றும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு வேதனை அடைந்தார் துக்காராம்.
கண் கலங்கிய நிலையில் அவர், "இறைவா! நான் இதற்காகவா உன் மீது பக்தி செலுத்துகிறேன்? இது தானா என் பக்திக்குப் பயன்? சிறப்பு, பெருமை, உயர்வு போன்றவற்றை எனக்குத் தந்துவிட்டு இறைவா, நீ என்னை விட்டு - விலகிச் செல்கிறாயே. இது நியாயமா?" என்று அழுது புலம்பினார்.