சோழ நாட்டில் அரதாச்சாரிய சுவாமிகள் என்பவர் இருந்தார். அவர் சிவபெருமான் மீது பெரிதும் பக்தி கொண்டவர்.
நாள்தோறும் அவர் தவறாமல் சிவ பூஜை செய்வார். அதன் பிறகே உணவு உட்கொள்வார்.
ஒரு நாள் அவர் வழக்கம் போல சிவ பூஜை செய்ய ஆரம்பித்தார்.
சீடர்களும் மற்றும் பலரும் அங்கே இருந்தார்கள்.
அப்போது தாகத்தால் வாடிய ஒரு நாய் அங்கு வந்தது. அதன் நிலையை அரதாச்சாரிய சுவாமிகள் உணர்ந்தார்.
அபிஷேக நீரை எடுத்து அவர் நாயின் முன் வைத்தார். உடனே அந்த நாய் அபிஷேக நீரைக் குடித்துவிட்டு அங்கிருந்து சென்றது.
அதைப் பார்த்த எல்லோரும் திகைத்தார்கள்.
அங்கிருந்த ஒருவர், "இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக இருந்த புனித நீரை நாய்க்குக் குடிக்கக் கொடுத்தீர்களே! இது தகுமா?" என்று கேட்டார்.
அதற்கு அரதாச்சாரிய சுவாமிகள், "சிவபெருமானே நாய் வடிவத்தில் வந்தால் நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார்.
கேள்வி கேட்டவர் அதைக் கேட்டுத் தலை கவிழ்ந்தார்.