“இந்தக் காட்டுக்கு யார் ராஜா தெரியுமா?" என்று மிருகங்களைப் பார்த்து கர்ஜனை செய்து வாலைச் சுழற்றி கேட்ட சிங்கம், ராஜநடை போட்டது.
“தாங்கள்தான் ராஜா" என்று முயல் மரியாதையாகக் கூறியது.
அடுத்து இருந்த மான், “இதில் என்ன சந்தேகம் பிரபோ, உங்களை விட்டால் யார் இருக்கிறார்?" என்றது.
சிங்கத்திற்கு மகிழ்ச்சி.
அடுத்து, நரியினிடத்தில் கேட்கும் முன்பே ‘சிங்கராஜாவுக்கு ஜே’ என்று சத்தமிட்டது.
சிங்கத்திற்குப் பெருமை தாங்க முடியவில்லை.
அடுத்து இருக்கும் யானையைப் பார்த்தது.
யானை கோபத்துடன் தன் துதிக்கையால் சிங்கத்தைச் சுற்றி வளைத்துத் தூக்கி வீசியது.
உருண்டு புரண்டு எழுந்த சிங்க ராஜாவோ அங்கிருந்தபடியே யானையிடம், “யார் ராஜா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் சும்மா இருக்கலாமே! இப்படியா பதில் சொல்வது!" என்றது.