ஒரு கோடீசுவரர் சுவர்க்க வாயிலில் நின்றுகொண்டிருந்தார். சுவர்க்கத்தின் வாயிற்காப்போன் அவரை அழைத்துச் சென்று, அவர் தங்க வேண்டிய ஒரு சிறு குடிசையைக் காட்டினான்.
துாரத்தில் பெரிய பெரிய மாடமாளிகைகள் இருக்க, தமக்கு இந்தச் சிறு குடிசைதானா என்று அவர் ஆச்சரியப்பட்டு, வாயிற்காப்போனைப் பார்த்து, “இத்தனை பெரிய மாளிகைகள் இருக்கும் போது, எனக்கு ஏன் இந்தச் சிறு குடிசையைக் காண்பிக்கிறாய்?’’ என்று கேட்டார்.
அதற்கு அந்த வாயிற்காப்போன், “நாங்கள் என்ன பண்ண முடியும்? நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்த பொருட்களை வைத்துக் கொண்டு இந்தச் சிறு குடிசையைத்தான் உங்களுக்குக் கட்ட முடிந்தது!’’ என்றான்.