ஜீனாய்ட் என்று ஒரு ஞானி இருந்தார்.
ஒரு சீடன் அவரிடம் வந்து, “உங்களிடம் ஞானம் என்ற முத்து இருப்பதாகச் சொல்கிறார்களே! எனக்கு அதில் கொஞ்சம் தேவை.
“ஒன்று, அதை என்னிடம் விற்று விடுங்கள். இல்லாவிட்டால் இனாமாகக் கொடுங்கள்” என்று கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, “உனக்கு அதை நான் விற்பதற்கில்லை. ஏனென்றால், அதன் விலையை உன்னால் கொடுக்க முடியாது. சரி, இனாமாகக் கொடுக்கலாமென்றால்... இனாமாகக் கொடுப்பதை நீ மதிக்கமாட்டாய்! ஆதலால் என்னைப் போல் நீயும் கடவுள் என்ற சமுத்திரத்தில் மூழ்கி எழுந்திரு! அப்போது நீயும் ஒரு முத்து எடுத்துக் கொண்டு வரலாம்!” என்று பதிலளித்தார்.
இதெல்லாம் வெளியில் வாங்குகிற சமாச்சாரம் இல்லை. உள்ளத்தில் ஆழ்ந்து மூழ்கும் முழுமையான முயற்சி இருக்க வேண்டும்!