ஒரு கார் மெக்கானிக் எஞ்ஜின் ஒன்றின் வால்வுகளைக் கழற்றிக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த வாடிக்கையாளர்களுள் ஓர் இதய மருத்துவரைக் கண்டார்.
உடனே உரத்து அவரை அருகில் அழைத்தார்.
வியப்படைந்த அவர் அவனருகில் வந்தார்.
‘‘டாக்டர்! பார்த்தீர்களா? நானும் உங்களைப் போல்தான் எஞ்சின் வால்வுகளை எடுத்துவிட்டு, எஞ்சினைச் சரி செய்து புது வால்வுகளைப் போட்டுச் சரி செய்கிறேன். என் கைப்பட்டதும் இந்த காரெல்லாம் சர்ரென்று பறக்கும். அப்படியிருக்க, நீங்கள் மட்டும் ஏன் பீஸை அவ்வளவு அதிகமாகக் கறக்கிறீர்கள்?’’
டாக்டரோ சுதாரித்துக் கொண்டு, ‘‘எஞ்சினை ஓடவிட்டுக் கொண்டு வால்வைச் சரி செய்து பார், தெரியும் சேதி’’ என்றார்.