சூஃபி சந்தர்ஜுனைத் என்பவரை யாராவது திட்டினால், அவர் நாளை பதில் சொல்கிறேன் என்பார்.
அடுத்த நாள் அவர் போய், இப்போது ஒரு பதிலும் தேவையில்லை என்று சொல்வார்.
ஒரு முறை சந்தர்ஜுனைத்தை நிந்தித்தவர், ''நேற்று நான் உங்களை கண்டபடி திட்டினேன். நீங்கள் ஏன் உடனே பதில் சொல்லவில்லை? பிறரை ஏதாவது சொன்னால் உடனே பதில் கூறுவர்'' என்றார் வியந்து.
''ஐயா, யாராவது உன்னைப் பற்றிக் குறை சொன்னால் உடனே பதிலளித்தால் அது உணர்ச்சி வசத்தில் சொன்னதாக இருக்கும்; புத்தியால் யோசித்துக் கூறியது ஆகாது. மனம் கசந்திருக்கும், தலை சூடேறியிருக்கும். அப்போது கூறும் பதில் அறிவுபூர்வமாக இருக்காது. அதனால் 24 மணி நேரம் காத்திருந்து, பின்னர் பதில் சொல்' என்று என் குரு எனக்கு உபதேசித்தார்'' என்றார் ஜுனைத்.
ஜுனைத் மேலும் சொன்னார் : ''என் குரு மிகவும் அறிவாளி. அவர் உபதேசத்தைக் கடைப்பிடிக்கத் துவங்கியதிலிருந்து நான் யாருக்கும் திருப்பிப் பதில் சொல்லவே முடியவில்லை!''