இரண்டு முழுப் பிரம்மச்சாரிகள் ஆற்றோரம் நடந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள், வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஓர் இளம் பெண்ணின் அலறலைக் கேட்டார்கள்.
இருவரும் கடும் பிரம்மசாரிகள், எந்தப் பெண்ணையும் தீண்டவேக் கூடாது.
ஆபத்துக்கு அதையெல்லாம் பார்க்கக் கூடாது என்று ஒருவன் வெள்ளத்தில் பாய்ந்து, அந்தப் பெண்ணைப் பற்றித் தோள் மீது சுமந்து வந்து அவளைக் கரை சேர்த்தான்.
இது நடந்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் வெகு தொலைவு சென்றுவிட்டனர்.
அப்போது பெண்ணை மீட்டவனிடம் அவன் நண்பன் கேட்டான், "அவளைத் தொட்டுத் தூக்கினாயே, எப்படி இருந்தது? உனக்கு மிகவும் பளுவாக இருந்தாளா அவள்?”
"நண்பனே! அவளை நான் கீழே இறக்கி இரண்டு மணி நேரமாகிவிட்டது. இப்போது அவளை நீதான் சுமந்து கொண்டு வருகிறாய். அவள் பளுவா, சுளுவா என்பதையெல்லாம் நீதான் சொல்ல வேண்டும்” என்றான் பெண்ணை மீட்டவன்.