சாம் என்ற கறுப்பினத்தவர் வெள்ளையருக்கான சர்ச்சுக்குச் சென்றார்.
அங்கே அவரை உள்ளே அனுமதிக்காமல் அவர்களுக்கான சர்ச்சுக்குச் செல்லுமாறு சொன்னார்கள்.
அடுத்த ஞாயிறு சாம் வெள்ளையர் சர்ச்சுக்கே சென்றார்.
அங்குள்ளவர்களிடம், ‘‘ஐயா! கவலைப்படாதீர்கள்; நான் சர்ச்சுக்குள் வரவில்லை. எங்களுக்கான சர்ச்சுக்குச் சென்று கடவுளிடம் பேசினேன். கடவுள் என்னிடம், ‘சாம், நீ அந்த சர்ச்சுக்குப் போக முடியவில்லையே என வருந்தாதே; பல வருடங்களாக அவர்கள் என்னையே அந்த சர்ச்சுக்குள் விடுவதில்லை’ என்று சொன்னார். அதை உங்களிடம் கூறிவிட்டுப் போகத்தான் வந்தேன்’’
அதனைக் கேட்ட அங்கிருந்த வெள்ளையர்கள் அனைவரும் தலை கவிழ்ந்தனர்.