முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கி வரச் சொன்னார். ''கண்ணுல போடுற கண்ணாடியா?'' என்று கேட்டதும் முதலாளி கோபத்தில், ''யோவ், சவரம் பண்ணறதுக்குய்யா... என் முகம் தெரியற மாதிரி ஒண்ணு வாங்கி வா'' என்று அனுப்பி வைத்தார்.
வேலைக்காரன் திரும்பி வரவில்லை.
நீண்ட நேரம் கழித்து மூச்சு வாங்க வெறுங்கையோடு வந்த அவனிடம், ''ஏன் கண்ணாடி வாங்கல?'' என்று கேட்டார் முதலாளி.
''க்டைகடையாய்த் தேடி அலைஞ்சேன் முதலாளி. ஆனாலும், நீங்க கேட்ட மாதிரி கண்ணாடி கிடைக்கல. அதுதான் வாங்கல''
''ஏன் பெருசா இருந்ததா?”
''இல்லை முதலாளி, சின்னதாத்தான் இருந்தது?''
''பின் ஏன் வாங்கல?''
''எல்லாக் கண்ணாடியிலும் என் முகம்தான் தெரிஞ்சது. அதான் வாங்கல...'' என்றான் அவன்.