ஒரு கத்தோலிக்கத் தொடக்கப்பள்ளிக் கூடத்தின் கேன்டீனில் மாணவ மாணவிகள் மதிய உணவுக்காக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
முதல் மேசையின் மேல் இருந்த கூடையில் ஆப்பிள் பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
பள்ளியின் ஆசிரியை ஓர் அட்டையில், "ஓர் ஆப்பிள் மட்டுமே எடுத்துக் கொள்ளவும். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று எழுதி, ஆப்பிள் கூடையின் மேல் வைத்தார்.
மேசையின் கடைசிக் கூடையில் சாக்லேட், பிஸ்கெட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
ஒரு மாணவன் ஓர் அட்டையில் அவசர அவசரமாக எழுதி அந்த சாக்லேட் கூடையில் வைத்தான்,
"வேண்டும் வரை அள்ளிக் கொள்ளவும். கடவுள் ஆப்பிளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்!”